தீபாவளியை முன்னிட்டு பருப்பு விலைகள் உயர்ந்துள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் பருப்பு விலைகளில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு, விருதுநகர் வணிக சந்தையில் துவரம், பாசிப்பருப்பு மற்றும் பட்டாணி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. துவரம் பருப்பு 100 கிலோ ரூ.10,800-க்கு விற்கப்படுகிறது. இதே நேரத்தில் உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றின் விலைகள் சற்று குறைந்துள்ளது.














