மானிய விலையில் பருப்பு வகைகளை தமிழகத்தில் மத்திய அரசின் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் என்சிசிஎஃப் நிறுவனம் மானிய விலையில் பருப்பு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாரத் டால் என்ற வணிக பெயரில் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட உள்ளது. இது தற்போது மாவட்டம் தோறும் நகரங்கள், கிராமங்களில் உள்ள முக்கிய இடங்களில் 50 நடமாடும் வேன்கள் மூலம் பாரத் டால் கடலைப்பருப்பு விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த எண்ணிக்கை விரைவில் நூறாக உயர்த்தப்படும். மேலும் கோதுமை, அரிசி, பாசிப்பருப்பு போன்ற ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














