அமிர்தசரஸ் - டெல்லி ரயில் பாதையில் ஆயிரக்கணக்கான பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்
பஞ்சாப் மாநிலத்தில் பயிர் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் வெள்ளத்தால் சேதம் ஆன பயிர்களுக்கு இழப்பீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தினால் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மூன்று நாட்கள் ரயில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தண்டவாளங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மற்றும் நாளை போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் கிஷான் மஸ்தூர் சங்கஸ் கமிட்டி, பாரதிய கிஷன் யூனியன், ஆசாத் கிஷான் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டுள்ளனர். டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் இந்த திடீர் போராட்டத்தால் பஞ்சாப்பின் பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.