பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி

54-வது ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன் பிறகு, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, பஞ்சாப் அணியின் […]

54-வது ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன் பிறகு, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது.

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, பஞ்சாப் அணியின் துல்லிய பந்து வீச்சால் பவர் பிளேவில் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்தது. லக்னோ அணி 78 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இறுதியில், லக்னோ அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து, 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், பஞ்சாப் அணி தனது 7-வது வெற்றியைக் கொண்டாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu