என்.டி ராமராவ்வின் மகள் மற்றும் பாஜகவின் மாநிலத் தலைவர் ஆன புரந்தேஸ்வரிக்கு பாராளுமன்ற சபாநாயகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து மத்திய ஆட்சியை பிடித்துள்ளது. அதில் சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு 5 மந்திரி பதவி, ஒரு சபாநாயகர் பதவியும் வழங்க வேண்டி வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு இரண்டு மந்திரி பதவிகளை பாஜக வழங்கி உள்ளது. மேலும் சந்திரபாபு நாயுடுவின் மனைவியின் சகோதரி ஆன புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி சந்திரபாபு நாயுடு பதவியேற்ற பின்பு புரந்தேஸ்வரி சபாநாயகராக பதவி ஏற்க என்று கூறப்படுகிறது. மேலும் இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராஜ முந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்














