விலை உயர்வை கட்டுப்படுத்த 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் - மத்திய அரசு

August 21, 2023

விலை உயர்வை கட்டுப்படுத்த கூடுதலாக இரண்டு லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு இப்போதே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் மத்திய அரசு மூன்று லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துள்ளது. அதோடு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து மத்திய […]

விலை உயர்வை கட்டுப்படுத்த கூடுதலாக இரண்டு லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு இப்போதே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் மத்திய அரசு மூன்று லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துள்ளது. அதோடு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆண்டு வெங்காயத்தின் இருப்பு அளவை 5 லட்சம் டன்னாக உயர்த்த கூடுதலாக இரண்டு லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக, சில்லறை விலைகள் அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு இருப்பில் இருந்து வெங்காயத்தை விடுவிப்பது தொடங்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 1400 டன் வெங்காயம் சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu