ரஷ்ய அதிபர் புதின் வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை போக்கும் ஒரு முயற்சியாக இந்த சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. வியட்நாம் அதிபர் டே லாமுடன் பிராந்தியத்துக்காக பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்குவது குறித்து அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. பிராந்தியத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணும் வகையில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று இருவரும் விரும்புவதாக புதின் கூறியுள்ளார். இதன் பிறகு பல்வேறு ஒப்பந்தங்களில் புதின் கையொப்பமிட்டார். அதோடு எதிரி நாடுகள் தாக்குதல் செய்யும்போது பரஸ்பரம் உதவி கொள்ளும் அம்சமும் இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.