ரஷ்ய அதிபர் புதினுடன் பெலாரஸ் அதிபர் சந்திப்பு

January 30, 2024

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஸ்என்கோ நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ரஷ்ய அதிபர் புதினை பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லூகாஸ்என்கோ நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இருநாட்டு மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது பேசிய புதின், வெளிநாட்டு அழுத்தத்தின் மத்தியிலும் ரஷ்யாவும் பெலாரஸும் சர்வதேச அரங்கில் நெருக்கமாக […]

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஸ்என்கோ நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ரஷ்ய அதிபர் புதினை பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லூகாஸ்என்கோ நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இருநாட்டு மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது பேசிய புதின், வெளிநாட்டு அழுத்தத்தின் மத்தியிலும் ரஷ்யாவும் பெலாரஸும் சர்வதேச அரங்கில் நெருக்கமாக ஒத்துழைத்தனர். நாங்கள் இருவரும் உண்மையான நட்பு நாடுகளாக 25 ஆண்டு காலம் ஒற்றுமையாக உள்ளோம் என்று தெரிவித்தார். ரஷ்யாவின் ஆதரவுடன் உள்நாட்டில் தனக்கு எதிர்ப்பு இருந்த போதிலும் பெலாரஸ் அதிபராக அலெக்சாண்டர் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவாக பெலாரசின் எல்லை பகுதிகளை ரஷ்ய படைகள் பயன்படுத்திக்கொள்ள பெலாரஸ் அதிபர் அனுமதி வழங்கியுள்ளார். அதோடு பெலாரஸ் வழியாக உக்ரைன் எல்லையை ஒட்டிய பகுதிகளில் அணு ஆயுதங்களை ரஷ்ய ராணுவம் நிலை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu