ரஷ்யாவில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் புதின் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
ரஷ்யாவில் வரும் மார்ச் 17ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தற்போதைய அதிபர் விளாடிமீர் புதின் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் சார்பில் போட்டியிடப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அந்த கட்சி முழு ஆதரவு அளித்திருக்கிறது என்ற போதிலும் அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. புதின் ரஷ்யாவை சுமார் 25 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார். வரும் மார்ச் மாதம் அவர் ஐந்தாவது முறையாக போட்டியிடுகிறார். அதற்கு ஏற்றவாறு நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர் மேலும் இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட இயலும். வரும் 2036 வரை அவர் ரஷ்ய அதிபராக தொடர முடியும். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவது உறுதி என்று பரவலாக பேசப்படுகிறது.














