ரஷிய அதிபர் புதின், டிரம்புடன் போரை முடிவுக்கு கொண்டு வரவும், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்யவும் தயாராக இருப்பதாக கூறினார்.
உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப், போரை நிறுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது, அவர் அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும் என்று கூறியிருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, டிரம்ப் உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பாக இருக்கலாம் என்று தெரிவித்தார். இந்நிலையில், ரஷிய அதிபர் புதின், டிரம்புடன் போரை முடிவுக்கு கொண்டு வரவும், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்யவும் தயாராக இருப்பதாக கூறினார். உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் எந்த நிபந்தனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.