புவி சிறக்க பல நன்மைகள் அருளும் புனிதர் புலிப்பாணி சித்தர்

புலிப்பாணி சித்தர் இவரும் பதினெண் சித்தர்களுள் ஒருவர் தான் பழனியில் ஜீவ சமாதி ஆகியிருப்பதாக சொல்லப்படும் மகா போகரின் முதன்மையான சீடர் புலிப்பாணி தான். ஜோதிட சாஸ்திரம் கற்று அதை தொழிலாக செய்து வருபவர்களும் ஒரு வழிகாட்டியாக இருப்பவர் என்றே இந்த புலிப்பாணி சித்தர் அவர்களை சொல்லலாம். இவர் அவதாரம் ஒரு அற்புத புரட்டாசி மாதம் ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இவரை ஒருசிலர் பொன் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் வேறு சிலர் வேடுவர் […]

புலிப்பாணி சித்தர் இவரும் பதினெண் சித்தர்களுள் ஒருவர் தான் பழனியில் ஜீவ சமாதி ஆகியிருப்பதாக சொல்லப்படும் மகா போகரின் முதன்மையான சீடர் புலிப்பாணி தான். ஜோதிட சாஸ்திரம் கற்று அதை தொழிலாக செய்து வருபவர்களும் ஒரு வழிகாட்டியாக இருப்பவர் என்றே இந்த புலிப்பாணி சித்தர் அவர்களை சொல்லலாம். இவர் அவதாரம் ஒரு அற்புத புரட்டாசி மாதம் ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இவரை ஒருசிலர் பொன் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் வேறு சிலர் வேடுவர் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் இருவிதமாக கூறுகின்றனர்.

ஜோதிட சாஸ்திரத்தில் புலியாகவும், தன் ஞான குரு போகரின் துணைகொண்டு மருத்துவத்தில் வித்தகராகவும் தமிழ் கடவுள் முருகனின் வழிபாட்டு முறையை ஆழமாக அறிந்தவராகவும், அட்டமா சித்திகள் அனைத்திலும் மிகவும் கைதேர்ந்தவராகவும் தன் குருவையே மிஞ்சிய சிறந்த சீடராகவும் திகழ்ந்தார். இவரின் குரு போகர் சேவைகள் செய்வதில் வல்லவர். அதனால் குருவின் அருகே இருந்து குருவிற்குத் தேவையான பணிவிடைகளையும் செய்து விரைவாக அனைத்து வித்தைகளையும் கற்றுக் தேர்ந்தார்.

போகர் பழனியில் நவபாக்ஷாண மூலிகை முருகனை உருவாக்க புலிப்பாணியே உற்ற உறுதுணையாய் இருந்தார். ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, தம் குருநாதர் போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து வெறும் கையாலேயே போதிய நீரெடுத்துக் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.[புலி + பாணி (நீர்)] . அதனால் தான் இவரைப் புலிப்பாணி என்று அழைக்கத் தொடங்கினார்கள் மக்கள்.

புலிப்பாணிக்கு ஒன்பது மூலிகைகளையும் விகிதாச்சாரத்தில் கலந்த நவபாஷாண முருகர் சிலையைப் பற்றியும், அந்த சிலைக்கு அபிஷேகம் செய்யும் பொருட்களைச் உண்டால் அது நச்சுத்தன்மைக்குப் பதிலாக மருத்துவத்தன்மை தரும் விஷயங்கள் பற்றியும் நன்கு தெரியும். போகர் தன் பணியைத் தொடர சீன தேசத்துக்கு செல்லும்பொழுது தன்னுடைய அனைத்து பொறுப்புகளையும் தன் அன்புக்குரிய சீடரான புலிப்பாணி சித்தரிடம் ஒப்படைத்ததாகவும் அதனை அவர் தொடர்ந்து சிறப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மூலிகை வைத்தியத்தில் கை தேர்ந்தவரான புலிப்பாணி பலருக்கு மூலிகை வைத்தியம் செய்து பலரை நோயில் இருந்து காத்துள்ளதாக கூறப்படுகிறது.ஒரு சூழலில் போகருக்கே ஒரு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது புலிப்பாணி அவருக்கு மருத்துவம் செய்ததாகவும் அதனால் புலிப்பாணி சித்தரை குருவை விஞ்சிய சீடர் என்றும் கூறுகிறார்கள். புலிப்பாணி சித்தருக்கு அவர் ஆசான் போகர் பழநி பால தண்டாயுதபாணியின் பூஜை முறைகளைச் சரியாக கற்றுக்கொடுத்தனால் அந்த சிலைக்கான வழிபாடு திருமுழுக்கு விதிமுறைகள் ஆகியவற்றை புலிப்பாணி சித்தர் இயற்றி சென்றுள்ளார்.

புலிப்பாணி சித்தரின் படைப்புகள் ஜோதிட ஆய்வுகளின் முக்கிய கூறு, சித்த மருத்துவம், வானியல் சாஸ்திரம், பூஜை முறைகள், சூத்திர விதிகள் அனைத்து துறைகளிலும் உள்ளன.இதில் தனிச் சிறப்பாகச் சொல்லக் கூடியது என்றால் புலிப்பாணி சித்தரின் "புலிப்பாணி ஜோதிடம் 300" தான். இதில் உள்ள பாடல்கள் மூலமாக ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கப் போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்துகொள்ள இயலும். அவர் ஜோதிடத்தில் சொல்லாத சூட்சமங்கள் என்று ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு அருமையாகக் எல்லாவற்றையும் கணக்கிட்டுச் சொல்லியுள்ளார்.

போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு தமது தவ வலிமைகளை இழந்து விடவே, இந்த புலிப்பாணியார் அவரை தமது முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்தார் என்றும் கூறப்படுகிறது.
பழனி கோவிலில் 205 வருடங்கள் புலிப்பாணி சித்தர் பூஜைகளைத் தொடர்ந்து செய்து வந்தார். போகர், சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதித்தார்கள்.

அதனால் போகர் இறந்த பிறகு அவரின் சமாதிக்கும் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் புலிப்பாணி. பின் அவரும் தன் குரு போகரைப் போலவே பழநி மலையிலேயே ஜீவ சமாதியாகி விட்டார். புலிப்பாணியின் சமாதி இன்றும் பழனி மலையின் வட கிழக்கு திசையில் அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

அவருக்கு பிறகு புலிப்பாணி பரம்பரையினர் பூஜை செய்யும் உரிமையை தொடர்ந்தார்கள்.புலிப்பாணி சித்தர் ஜீவ சமாதி அடைந்தாலும் இன்றும் பழனியில் அருவமாய் புலிப்பாணி சித்தர் உலவுவதாகவும், அவரிடம் மனமுருகி வேண்டுபவர்களுக்கு வேண்டியதை அப்படியே அருள் புரிவதாகவும் பெரும் நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu