பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனங்களின் மாத சந்தா திட்டம் அறிவிப்பு

October 16, 2023

பிவிஆர் ஐநாக்ஸ் கூட்டணி நிறுவனம், ‘பிவிஆர் ஐநாக்ஸ் பாஸ்போர்ட்’ என்ற பெயரில் மாத சந்தா திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், குறைந்த கட்டணத்தில் திரைப்படங்களை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ‘பிவிஆர் ஐநாக்ஸ் பாஸ்போர்ட்’ மாத சந்தா திட்டம் அறிமுகம் ஆகி உள்ளது. மாதத்திற்கு 699 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்போர்ட்டை வைத்து, ஒரு மாதத்தில் 10 திரைப்படங்களை சந்தாதாரர் பார்க்க முடியும். இது, திங்கள் முதல் வியாழன் வரையில் மட்டுமே […]

பிவிஆர் ஐநாக்ஸ் கூட்டணி நிறுவனம், ‘பிவிஆர் ஐநாக்ஸ் பாஸ்போர்ட்’ என்ற பெயரில் மாத சந்தா திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், குறைந்த கட்டணத்தில் திரைப்படங்களை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ‘பிவிஆர் ஐநாக்ஸ் பாஸ்போர்ட்’ மாத சந்தா திட்டம் அறிமுகம் ஆகி உள்ளது. மாதத்திற்கு 699 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்போர்ட்டை வைத்து, ஒரு மாதத்தில் 10 திரைப்படங்களை சந்தாதாரர் பார்க்க முடியும். இது, திங்கள் முதல் வியாழன் வரையில் மட்டுமே செல்லுபடியாகும். அத்துடன், ஐ மேக்ஸ், கோல்ட், லூக்ஸ், டைரக்டர்ஸ் கட் போன்ற பிரீமியம் சேவைகளுக்கு செல்லுபடி ஆகாது. இந்த சந்தா திட்டம் பொதுமக்களை மீண்டும் திரையரங்குகள் நோக்கி வர வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu