விமானத்தில் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்துள்ளது.
எலான் மஸ்க் தலைமையில், உலகின் மிகப்பெரிய தனியார் செயற்கைக்கோள் மண்டலம் ஸ்டார்லிங்க் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்துடன் இணைந்து, விமான பயணங்களில் இணைய சேவையை வழங்க, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களில், ஸ்டார்லிங்க் இணைய சேவை கொடுக்கப்படும். இதற்காக, தனியாக கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது என கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. எந்தெந்த வழித்தடங்களில் இணைய சேவை கிடைக்கும் என்பது குறித்த விரிவான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.