கால்பந்து உலகக் கோப்பைக்கு மத்தியில் கத்தார் ஏர்வேஸ் 10,000 பணியாளர்களை நியமிக்க உள்ளது

October 17, 2022

கால்பந்து உலகக் கோப்பைக்காக தோஹாவிற்கு வரும் பயணிகளின் வருகைக்காக கத்தார் ஏர்வேஸ் கூடுதலாக 10,000 பணியாளர்களை நியமிக்க உள்ளது. இதன்மூலம் தற்போது 45,000 வரை உள்ள பணியாளர்கள் எண்ணிக்கை 55,000 ஆக உயரவுள்ளது. இது குறித்து நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 'கொரோனா தொற்றுக்குப்பின் தொடர்ந்து கத்தார் ஏர்வேஸ் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. அதோடு கால்பந்து உலகக் கோப்பை தொடர்பான ஏற்பாடுகள் முழு வீச்சில் இருப்பதால், விமான நிறுவனம் ஆட்சேர்ப்புகளை அதிகரித்து வருகிறது". இவ்வாறு கூறப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களில் […]

கால்பந்து உலகக் கோப்பைக்காக தோஹாவிற்கு வரும் பயணிகளின் வருகைக்காக கத்தார் ஏர்வேஸ் கூடுதலாக 10,000 பணியாளர்களை நியமிக்க உள்ளது. இதன்மூலம் தற்போது 45,000 வரை உள்ள பணியாளர்கள் எண்ணிக்கை 55,000 ஆக உயரவுள்ளது.

இது குறித்து நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 'கொரோனா தொற்றுக்குப்பின் தொடர்ந்து கத்தார் ஏர்வேஸ் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. அதோடு கால்பந்து உலகக் கோப்பை தொடர்பான ஏற்பாடுகள் முழு வீச்சில் இருப்பதால், விமான நிறுவனம் ஆட்சேர்ப்புகளை அதிகரித்து வருகிறது". இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புதிய பணியிடங்களில் எத்தனை நிரந்தரமாக இருக்கும் என்பதை விமான நிறுவனம் கூற மறுத்துவிட்டது. 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது 33 நகரங்களாக அதன் இலக்குகளைக் குறைத்த பின்னர், 2021 ஆம் ஆண்டில் ஊழியர்களின் எண்ணிக்கையை 37,000 க்குக் கீழே குறைத்தது. அதன் பின்னர் இது 150 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மீண்டும் தனது செயல்பாடுகளை அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் பிற நாடுகளில் ஆட்சேர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.

கத்தாருக்கு ஒரு மாத கால உலகக் கோப்பையின் போது 1.2 மில்லியன் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் போது, கத்தார் ஏர்வேஸ், தோஹாவிற்கு வரும் கூடுதல் விமானங்களுக்கு வழி வகுக்கும் வகையில் அதன் அட்டவணையில் 70% சரிசெய்து வருகிறது. மேலும் ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய விமானங்களை விடுவிக்கும் பொருட்டு மற்ற விமானங்களை ரத்து செய்து குறைத்துள்ளது. இது குறித்து கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல்-பேக்கர், "அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கான தேவையை நிர்வகிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்" என்று கூறினார்.

மற்ற விமான நிறுவனங்கள் கூட கத்தாருக்கான விமானங்களை கணிசமாக அதிகரிக்கும். இதற்காக பழைய விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu