கத்தாரில், இந்திய கடற்படையை சேர்ந்த முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை பரிசீலனை செய்யுமாறு இந்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது, இவர்களின் மரண தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையை சேர்ந்த முன்னாள் வீரர்கள் 8 பேர், கத்தாரில் உள்ள அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் அந்நாட்டை உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக, மரண தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. ஆனால், எத்தனை காலத்திற்கு சிறைக் காவல் விதிக்கப்பட்டுள்ளது போன்ற விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.