அண்மையில் மத்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, க்யூ ஆர் ஸ்கேன் அடிப்படையில் சில்லறைகளை வழங்கும் இயந்திரம் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்த தாஸ், "இந்தியாவில் உள்ள 12 முக்கிய நகரங்களில், 19 இடங்களில், க்யூ ஆர் கோடு அடிப்படையிலான நாணயங்களை கொடுக்கும் QCVM இயந்திரம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக, ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் இந்த இயந்திரம் அமைக்கப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள், எளிமையாக சில்லரைகளை அணுகி பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இதனால் ரூபாய் நோட்டுகளுக்கான தேவை மற்றும் அங்கீகாரம் நீக்கப்படும். இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி நாணயங்கள் விநியோகிப்பதை ஊக்குவிக்க வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இந்த விற்பனை இயந்திரங்கள் பணத்தாள்களை வழங்குவதற்குப் பதிலாக, UPI சேவையை பயன்படுத்தி வாடிக்கையாளரின் கணக்கில் டெபிட் செய்யாமல் நாணயங்களை வழங்கும்." என்று கூறினார்.














