ரெயில் நிலையங்களில் 'கியூஆர்கோடு' 'யு.பி.ஐ. செயலி' மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் வசதி

February 21, 2023

முக்கிய ரெயில் நிலையங்களில் 'கியூஆர்கோடு' 'யு.பி.ஐ. செயலி' மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு டிக்கெட் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி எடுப்பதுபோல முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை யு.பி.ஐ. மூலம் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போது ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. 'ஸ்மார்ட் கார்டு' மூலம் ரீ சார்ஜ் வசதியுடன் இந்த வசதி பயணிகளுக்கு […]

முக்கிய ரெயில் நிலையங்களில் 'கியூஆர்கோடு' 'யு.பி.ஐ. செயலி' மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு டிக்கெட் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி எடுப்பதுபோல முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை யு.பி.ஐ. மூலம் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போது ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. 'ஸ்மார்ட் கார்டு' மூலம் ரீ சார்ஜ் வசதியுடன் இந்த வசதி பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் யு.பி.ஐ. செயலி மூலம் டிக்கெட் பெறுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், தானியங்கி டிக்கெட் வாங்கும் எந்திரத்தில் உள்ள திரையில் பயணி எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என தேர்வு செய்த பிறகு அதற்கான கட்டணத்தை யு.பி.ஐ. செயலி அல்லது கியூ.ஆர்.கோடு மூலம் எளிதாக செலுத்தலாம். இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதும் ஸ்மார்ட் கார்டையும் பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu