குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி

September 23, 2024

குவாட் மாநாட்டில் பங்கேற்றதை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கருத்தை பகிர்ந்தார். அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றார். பிறகு குவாட் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்தனர். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது, "குவாட் தலைவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகளாவிய நலனுக்காக எவ்வாறு செயல்படலாம் என்பதற்கான விவாதங்கள் பயனுள்ளதாக இருந்தன […]

குவாட் மாநாட்டில் பங்கேற்றதை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கருத்தை பகிர்ந்தார்.

அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றார். பிறகு குவாட் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்தனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது, "குவாட் தலைவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகளாவிய நலனுக்காக எவ்வாறு செயல்படலாம் என்பதற்கான விவாதங்கள் பயனுள்ளதாக இருந்தன என்று குறிப்பிட்டார். மேலும், "சுகாதாரம், தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டில் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்" என்றார். அடுத்ததாக, "ஜப்பானின் பிரதமர் கிஷிதாவுடன் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, பசுமை ஆற்றல் ஆகியவற்றில் ஒத்துழைப்பைப் பற்றி பேசினோம்" என்றும், "ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸுடன் வர்த்தகம் மற்றும் விண்வெளி குறித்து விவாதித்தோம்" என்றார். இறுதியில், கலாச்சார சொத்துக்களின் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக போராட்டத்தை வலுப்படுத்தியதற்காக ஜனாதிபதி பைடனுக்கு நன்றி கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu