குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் – கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு

April 22, 2025

இன்று முதல் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி உயர்வை எதிர்த்து, கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கடந்த 16ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பிரச்னையை தீர்க்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அரசு தரப்பில் வரி விபரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்று, குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற முடிவு செய்தனர். இதனையடுத்து, […]

இன்று முதல் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி உயர்வை எதிர்த்து, கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கடந்த 16ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பிரச்னையை தீர்க்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அரசு தரப்பில் வரி விபரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்று, குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற முடிவு செய்தனர். இதனையடுத்து, அவர்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில், இன்று முதல் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் ஆகியவை தலா 1000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu