6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் இணைந்து வெளியிட்டுள்ளனர். அதன் படி, 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் 26-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே தேதிகளில் காலாண்டு தேர்வு நடைபெறும். இதேவேளை, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுகள் செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெறும். 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் காலை நேரத்தில், 11-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.














