பீகார் மாநிலத்தின் சட்டசபை மேல்சபை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மனைவியுமான ராபரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா இணைந்து பீகாரில் கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து பீகாரின் முதல் மந்திரியாக நிதீஷ்குமார், துணை மந்திரி ஆக தேஜஸ்வி யாதவும் பதவி வகித்து வந்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல் மந்திரியாக பதவி ஏற்றார். இந்நிலையில் கூட்டணி கட்சிகள் நிர்வாக கூட்டத்தில் சட்டசபை மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.














