காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 31-ந்தேதி முதல் 10 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜூன் 4-ந்தேதி அவர் நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளி நாடுவாழ் இந்தியர்களுடன் உரையாற்ற உள்ளார். அமெரிக்கா பயணத்தின் போது அவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாள் பயணமாக அவர் அமெரிக்கா செல்லும் போது வாஷிங்டன் டிசி மற்றும் லாஸ்ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களுக்கும் செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதிகள் மற்றும் தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் உரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி ஜூலை மாதம் 22-ந்தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளார். அதற்கு முன்பாக ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.