ராகுல் காந்தி பாதயாத்திரை தற்போது காஷ்மீர் வந்தடைந்தது.
பாரத் ஜோடோ என்ற கோஷத்துடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, செப்டம்பர் 7ல் கன்னியாகுமரியில் நடைபயணம் துவக்கினார். இந்த பயணத்திற்கு 'இந்திய ஒற்றுமை யாத்திரை' என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நடைபயணம் 148 நாட்களில் 3,700 கி.மீ., துாரம் கடந்து காஷ்மீரில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் கடந்து வந்த இந்த யாத்திரை இன்று காஷ்மீர் வந்தடைந்தது. காஷ்மீரின் லகான்பூர் வந்தடைந்த நிலையில் ஏராளமானோர் தீப்பந்தம் ஏந்தி ராகுலுடன் வந்தனர்.