டெல்லி எல்லையில் பதற்றம் - காவல்துறையினர் குவிப்பு

December 4, 2024

நவம்பர் 19 அன்று, உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஹரிஹர் கோவில் இருப்பதாக எழுந்த மனுவை அடுத்து நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆய்வு செய்ய முயன்றபோது வன்முறை ஏற்பட்டது. மக்கள் குழுக்கள் ஆர்ப்பாட்டத்துக்கு திரண்டு, கற்கள் வீசி வாகனங்களை எரித்ததில் 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, சமாதானத்தை உறுதிப்படுத்த சம்பல் மாவட்ட நிர்வாகம் வெளிநபர்கள் நுழைய தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், சம்பலில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட […]

நவம்பர் 19 அன்று, உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஹரிஹர் கோவில் இருப்பதாக எழுந்த மனுவை அடுத்து நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆய்வு செய்ய முயன்றபோது வன்முறை ஏற்பட்டது. மக்கள் குழுக்கள் ஆர்ப்பாட்டத்துக்கு திரண்டு, கற்கள் வீசி வாகனங்களை எரித்ததில் 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, சமாதானத்தை உறுதிப்படுத்த சம்பல் மாவட்ட நிர்வாகம் வெளிநபர்கள் நுழைய தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், சம்பலில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று வருகைதர முயன்ற நிலையில், தில்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். சம்பல் மாவட்டத்தில் வெளி நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ராகுல் மற்றும் பிரியங்காவை தடுக்க காஸிப்பூர் எல்லையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதால், அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ராகுலுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கூடிவர, போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu