ராகுல் காந்தி ஐரோப்பா பயணம்

August 25, 2023

ராகுல் காந்தி ஒற்றுமை இந்தியா யாத்திரையை சில மாதங்களுக்கு முன்பு முடித்த நிலையில் அதன் அடுத்த கட்டமாக நாட்டின் மேற்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு தனது பயணத்தை தொடங்க உள்ளார். செப்டம்பர் 6ஆம் தேதி ராகுல் காந்தி டெல்லியில் இருந்து ஐந்து நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம்,பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். அவர் அங்குள்ள இந்திய வம்சாவளி மக்களுடன் சந்தித்து பேச உள்ளார். பின்னர் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று பெல்ஜியத்தின் பிரஸ்செல்ஸ் […]

ராகுல் காந்தி ஒற்றுமை இந்தியா யாத்திரையை சில மாதங்களுக்கு முன்பு முடித்த நிலையில் அதன் அடுத்த கட்டமாக நாட்டின் மேற்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு தனது பயணத்தை தொடங்க உள்ளார்.

செப்டம்பர் 6ஆம் தேதி ராகுல் காந்தி டெல்லியில் இருந்து ஐந்து நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம்,பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். அவர் அங்குள்ள இந்திய வம்சாவளி மக்களுடன் சந்தித்து பேச உள்ளார். பின்னர் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று பெல்ஜியத்தின் பிரஸ்செல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க உள்ளார். இதனை அடுத்து பாரிஸ் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 8ஆம் தேதி அவர் உரையாற்றுகிறார். பிரான்ஸ் தொழிலாளர் சங்க பிரதிநிதிகளை செப்டம்பர் 9ஆம் தேதி அன்றும், பயணத்தின் இறுதி நாளான 10ம் தேதி நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கும் அவர் செல்ல இருக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu