2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது.
சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் 23ம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது எம்பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆர்பி மொகேரா, அடுத்த விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கை சூரத் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ராகுல் காந்திக்கான தண்டனை நீடிக்கிறது. அடுத்ததாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.