இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்கும் மக்கள் மற்றும் தலைவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3ம் தேதி தொடங்க உள்ள ஒற்றுமை யாத்திரை பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் வழியாக செல்ல உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்திக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், யாத்திரையில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களை உளவுத்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.