ஜம்மு காஷ்ரில் மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை, பல மாநிலங்களை கடந்து காஷ்மீருக்குள் நுழைந்தது. நேற்றைய பாதயாத்திரையில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல் வானி ஆகியோரும் பங்கேற்றனர். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் கொட்டும் மழையில் ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் பகுதியிலிருந்து தொடங்கியது.
கொட்டும் மழையில் ராம்பன் பகுதியில் இருந்து பனிஹால் நகரம் நோக்கி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மோசமான வானிலை மற்றும் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக இன்று மாலை நடைபெற இருந்த ராகுல்காந்தியின் நடைப்பயணம் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.














