இன்று டில்லிக்குள் நுழைந்த ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவடட்டத்தில் துவங்கிய ராகுல்காந்தியின் ‛ பாரத் ஜோடோ யாத்திரை' கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம் வழியாக சென்று, தற்போது ராஜஸ்தானைக் கடந்து டெல்லியை அடைந்தது. இந்த பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, பொதுச்செயலாளர் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வாத்ரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.














