கடந்த 12ஆம் தேதி மணல் குவாரிகளில் நடைபெறும் சட்ட விரோத செயல்பாடு தொடர்பாக அமலாக்க துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றன.
புதுக்கோட்டையில் உள்ள பிரபல தொழிலாளரும், மணல் குவாரி ஒப்பந்ததாரர் ஆன முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் அவருக்கு சொந்தமான பத்து இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர். இதில் நேற்று முன்தினம் கந்தர்வகோட்டையில் புனல்குளம் சண்முகம் என்பவரின் குவாரி, புதுக்கோட்டை தனியார் கட்டுமான நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று நிஜாம் காலனி ராமச்சந்திரன் அலுவலகம், முத்து பட்டினத்தில் உள்ள அவரது வீடு, ஆடிட்டர் முருகேசன் அலுவலகம், ராமச்சந்திரன் தொழில் கூட்டாளி தொழிலதிபர் மணிவண்ணன், ராமச்சந்திரனின் உறவினர்கள் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.இன்று மீண்டும் அமலாக்கத்துறை சோதனை மூன்றாவது நாளாக தொடர்ந்து ராமச்சந்திரன் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்போது ராமச்சந்திரன் ஊரில் இல்லாத நிலையிலும் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் அங்கு காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். எவ்வித ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த தகவல்கள் எதையும் இதுவரை அதிவகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.