ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது.
நாடு முழுவதும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கான மக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை 11 மணியிலிருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணையதளம் செயல்படாமல் முடங்கியது. மேலும் இதனால் சாதாரண முன் பதிவு, தட்கல் முன்பதிவு செய்யக்கூடிய மக்கள் பாதிக்கப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு முன்பதிவு தொடங்கும் என ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.