இந்திய ரெயில்வேயின் டிக்கெட் கட்டண உயர்வு முடிவை தொடர்ந்து, மக்கள் மத்தியில் கவலையும் அதிர்ச்சியும் உருவாகியுள்ளது. புதிய கட்டணங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தற்போது வெளியாகிய தகவலின்படி, ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசா மற்றும் சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. எனினும், 500 கி.மீ.க்கு குறைவான தூரப் பயணங்களுக்கும், புறநகர் ரெயில்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தாது. இதனால் குறுகிய தூர பயணிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. இதுவரை அடிக்கடி பயணிக்கின்ற பயணிகள் வரவேற்ற நிலையில், நீண்ட தூர பயணிகள் இந்த மாற்றத்தால் செலவுச் சுமையை எதிர்நோக்க வேண்டியுள்ளது.