ரெயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது.
நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரெயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். தெற்கு ரெயில்வேயில் 493 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத் தேர்வு இன்று ஷிஃப்ட் முறையில் நடைபெறவிருந்தது. ஆனால், எந்த முன்னறிவிப்பும் இன்றி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு மையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் மையங்கள் அமைத்தது ஏற்கனவே எதிர்ப்பை எழுப்பியது. இப்போது, நீண்ட பயணத்திற்குப் பிறகு தேர்வு திடீர் ரத்து செய்யப்பட்டதால், 6,000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கடும் விரக்தியடைந்துள்ளனர்.