ரூ.650 கோடியில் இந்தியா உதவியுடன் இலங்கையில் ரெயில் பாதை சீரமைப்பு பணி 

January 10, 2023

ரூ.650 கோடி செலவில் இந்தியா உதவியுடன் இலங்கையில் ரெயில் பாதை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 252 கி.மீ. தூர ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகளுக்கு உதவ முன்வந்துள்ளது. இந்த ரெயில் பாதை சுமார் ரூ.650 கோடி மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை இர்கான் இன்டர்நேஷனல் என்ற இந்திய நிறுவனம் மேற்கொள்கிறது. முதல்கட்டமாக மதுரோடு முதல் […]

ரூ.650 கோடி செலவில் இந்தியா உதவியுடன் இலங்கையில் ரெயில் பாதை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 252 கி.மீ. தூர ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகளுக்கு உதவ முன்வந்துள்ளது. இந்த ரெயில் பாதை சுமார் ரூ.650 கோடி மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை இர்கான் இன்டர்நேஷனல் என்ற இந்திய நிறுவனம் மேற்கொள்கிறது. முதல்கட்டமாக மதுரோடு முதல் மதவாச்சி வரையிலான 43 கி.மீ. தூர பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, 'இலங்கை ரெயில்வே துறையில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு அதிகமான திட்டங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. மேலும் சுமார் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டிலும், பரிசீலனையிலும் உள்ளன என்று தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu