மகா கும்பமேளாவிற்கு ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவிற்கு ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து உத்தர பிரதேச அரசு மேற்கொண்டுள்ளது. பிரயாக்ராஜ் நகருக்கு அனைத்து வகையான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக 40 புதிய மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவிற்கு ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தத் தொகை ரெயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு மற்றும் புதிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு செலவிடப்பட்டுள்ளது. புதிய ரெயில்வே வழித்தடங்கள், நடைமேடைகள் மற்றும் கங்கை நதியில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.














