ரெயிலில் பயணியின் உடைமை திருட்டு போனால் ரெயில்வே பொறுப்பு ஆகாது என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
சுரேந்தர் போலா என்ற தொழில் அதிபர் காசி விஸ்வநாத் ரெயிலில் 2005-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 27-ந்தேதியன்று டெல்லிக்கு பயணம் செய்தார். இது முன்பதிவுப் பயணம் ஆகும். ரெயில் பயணத்தின்போது அவர் இடுப்பில் அணிந்த பெல்ட்டின் பையில் இருந்த ரூ.1 லட்சம் காணாமல் போனது. அவர் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் தேசிய குறைதீர் ஆணையம், அவருக்கு ரெயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து ரயில்வே வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில், சுரேந்தர் போலாவுக்கு ரெயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது. மேலும் ரெயில் பயணத்தின்போது, தனது உடைமையை பயணி பாதுகாத்துக்கொள்ள முடியாமல், திருட்டு போனால், அதற்கு ரெயில்வே பொறுப்பு ஆகாது என்று கூறப்பட்டுள்ளது.