இணைய வழியில் பயணச்சீட்டுகள் விற்பனையை மேற்கொள்வதால் ரயில்வே துறை அதிக வருவாயை ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், 54313 கோடி மதிப்பிலான வருவாய், இணைய வழி பயண சீட்டுகள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. அத்துடன், இணையவழி முன்பதிவு சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா பரவல் சமயத்தில் ரயில் பயணங்களை தவிர்த்து வந்த மக்கள், தற்போது மீண்டும் பயணங்களை மேற்கொண்டு வருவதால், வருவாய் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த நிதி ஆண்டில், மொத்தமாக 4.3 கோடி எண்ணிக்கையில் இணைய வழி பயண சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.














