உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ஏழாவது தேசிய மகளிர் குத்து சண்டை சாம்பியன்ஷிப்பில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை இரயில்வேஸ் அணி கைப்பற்றியது.
உத்திரபிரதேசத்தில் ஏழாவது தேசிய மகளிர் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இரயில்வேஸ் அணி ஒட்டுமொத்தமாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. இந்த அணியை சேர்ந்தவர்கள் மொத்தமாக ஐந்து தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என எட்டு பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் ஹரியானா மூன்று தங்கம், மூன்று வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டாம் இடமும், ஒரு தங்கம் 2 வெள்ளி 3 வெண்கலம் என ஆறு பதக்கங்களுடன் அகில இந்திய காவல் துறை மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. இறுதி போட்டியில் சவீதி பூரா 81 கிலோ பிரிவில் ஹரியானாவிற்காக தங்கம் வென்றுள்ளார். 50 கிலோ பிரிவில் ரயில்வேஸின் அனாமிகா, 57 கிலோ பிரிவில் சோனியா லேதேர், 54 கிலோ பிரிவில் சிக்ஷா, 75 கிலோ பிரிவில் நந்தினி ஆகியோர் இரயில்வேஸ் அணிக்காக தங்கம் வென்று உள்ளனர். மேலும் ஹரியானா தரப்பில் 63 கிலோ பிரிவில் பிராச்சி முதலிடம் பிடித்துள்ளார்.