சீனா - புழு மழை பெய்ததாக சமூக ஊடகங்களில் செய்தி பரவல்

March 13, 2023

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில், விசித்திரமான முறையில், மழை நீருடன் சேர்ந்து புழுக்களும் விழுந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. மக்கள் புழுக்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள, குடைகளை பிடித்து நடக்குமாறு அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. மேலும், சாலையோரங்களில் உள்ள வாகனங்களில், அதிக எண்ணிக்கையில் புழுக்கள் இருப்பது அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வினோதமான இந்த மழை பொழிவுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதனிடையே, சீன பத்திரிக்கையாளர் ஒருவர், “இந்த […]

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில், விசித்திரமான முறையில், மழை நீருடன் சேர்ந்து புழுக்களும் விழுந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. மக்கள் புழுக்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள, குடைகளை பிடித்து நடக்குமாறு அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. மேலும், சாலையோரங்களில் உள்ள வாகனங்களில், அதிக எண்ணிக்கையில் புழுக்கள் இருப்பது அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வினோதமான இந்த மழை பொழிவுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதனிடையே, சீன பத்திரிக்கையாளர் ஒருவர், “இந்த காணொளி போலியானது. பெய்ஜிங்கில், அண்மையில் மழை பொழிவுகள் பதிவாகவில்லை” என்று தெரிவித்துள்ளார். அதே வேளையில், மதர் நேச்சர் என்ற அறிவியல் ஆய்விதழ், ‘சூறாவளி காற்று காரணமாக புழுக்கள் அடித்து வரப்பட்டு இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது. மற்றொரு அறிவியல் அறிக்கை, ‘வீடியோவில் காண்பது புழுக்கள் அல்ல. அவை புழுக்கள் போன்று தோற்றமளிக்கும் பாப்லர் பூக்கள் என்று அறியப்படும் ஒரு வகை பூக்கள் ஆகும்’ என்று கூறியுள்ளது.சீன அரசு தரப்பில் இதற்கான எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu