7 கோவில்களில் ரூ.36 கோடி செலவில் ராஜகோபுரம் - அமைச்சர் சேகர்பாபு 

கடந்த 2 ஆண்டுகளில் 7 கோவில்களில் ராஜகோபுரம் கட்ட ரூ.36 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், முதலமைச்சரின் அறிவுரைப்படி 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 509 கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 47 கோவில்களில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார். மேலும் நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவிலில் 21 கோடி ரூபாய் செலவில் […]

கடந்த 2 ஆண்டுகளில் 7 கோவில்களில் ராஜகோபுரம் கட்ட ரூ.36 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், முதலமைச்சரின் அறிவுரைப்படி 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 509 கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 47 கோவில்களில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

மேலும் நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவிலில் 21 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடமுழுக்கு திருப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu