அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தலைமை பதவியை ஏற்க முன்வராத நிலையில், தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருகிற அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாகவும், செப்டம்பர் 26 அல்லது 27ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.