ராஜஸ்தானின் மான்கட் தாம் பகுதி தேசிய நினைவுச் சின்னமாக போற்றப்படும் - பிரதமர் நரேந்திர மோடி 

November 2, 2022

இனி தேசிய நினைவுச் சின்னமாக மான்கட் தாம் போற்றப்படும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழங்குடியினரின் படுகொலைக்காக மான்கட் தாம் இன்றளவும் நினைவு கூரப்படுகிறது. இது சில சமயங்களில் ‘ஆதிவாசி ஜாலியன்வாலா’ என்றும் அழைக்கப்படுகிறது. 1913-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் எல்லையில் உள்ள மான்கட் மலைகளில் நூற்றுக்கணக்கான பில் இன பழங்குடியினரை பிரிட்டிஷ் […]

இனி தேசிய நினைவுச் சின்னமாக மான்கட் தாம் போற்றப்படும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழங்குடியினரின் படுகொலைக்காக மான்கட் தாம் இன்றளவும் நினைவு கூரப்படுகிறது. இது சில சமயங்களில் ‘ஆதிவாசி ஜாலியன்வாலா’ என்றும் அழைக்கப்படுகிறது. 1913-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் எல்லையில் உள்ள மான்கட் மலைகளில் நூற்றுக்கணக்கான பில் இன பழங்குடியினரை பிரிட்டிஷ் படைகள் கொன்றன. இந்த படுகொலையில் மொத்தம் 1,500 பழங்குடியினர் கொல்லப்பட்டனர். ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினர் இந்த இடத்தை புனிதமான இடமாகப் போற்றுகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மான்கட் தாம் பகுதி, தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் நேற்று பன்ஸ்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மான்கட் தாம் பகுதியை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்தார்

விழாவில் பேசிய பிரதமர் மோடி, நான் முதல்வராக இருந்த காலத்தில், அசோக் கெலாட்டும் முதல்வராக இருந்திருக்கிறார். நாங்கள் இருவருமே ஒரே நேரத்தில் முதல்வர்களாக பணியாற்றி இருக்கிறோம். அவர் எங்களுக்கு மிகவும் மூத்தவர். தற்போது நாட்டில் முதல்வர் பதவியில் அமர்ந்திருப்பவர்களில் மிகவும் மூத்த முதல்வர் என்ற பெருமை அவருக்கு உண்டு” என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu