அருணாச்சலப் பிரதேச மாநிலம் அருகே உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த 9-ம் தேதி, சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
"கடந்த 9-ம் தேதி, சீனாவின் பிஎல்ஏ துருப்புக்கள் தவாங் பிரிவின் யாங்ட்சே பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை மீறி, தன்னிச்சையாக, இருநாடுகளுக்கு இடையே நிலவும் தற்போதைய நிலையை மாற்ற முயன்றனர். பிஎல்ஏ வீரர்கள் நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை இந்திய ராணுவம் துணிச்சலாகத் தடுத்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நமது தரப்பில் உயிரிழப்புகளோ, கடுமையான காயமோ ஏற்படவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.