மாநிலங்களவையில் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2023 நிறைவேற்றம்

மாநிலங்களவையில் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா 2023 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், சினிமா பைரசி எனப்படும் திரைப்பட திருட்டுக்கு கடுமையான தண்டனைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், திரைப்பட தணிக்கை சான்றிதழில், வயது விவரங்களை இணைக்கும் முறை கொண்டுவரப்படுகிறது. மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், திரைப்படத் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு இனிமேல் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இல்லையென்றால், திரைப்படத்தின் தயாரிப்பு செலவுகளில் 5% தொகையை […]

மாநிலங்களவையில் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா 2023 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், சினிமா பைரசி எனப்படும் திரைப்பட திருட்டுக்கு கடுமையான தண்டனைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், திரைப்பட தணிக்கை சான்றிதழில், வயது விவரங்களை இணைக்கும் முறை கொண்டுவரப்படுகிறது. மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், திரைப்படத் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு இனிமேல் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இல்லையென்றால், திரைப்படத்தின் தயாரிப்பு செலவுகளில் 5% தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். மேலும், திரைப்பட தணிக்கை சான்றிதழில் UA 7+, UA 13+, UA 16+ என்று குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது. இதன் மூலம், எந்தெந்த வயதினர் திரைப்படத்தை காணலாம் என்பது குறித்த தெளிவான விவரம் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu