கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி மாநிலங்களவையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணயர்களை நியமிக்கும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவின் அரசியலமைப்பின்படி நிர்வாகம், பாராளுமன்ற மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றது. இதில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஒரு புதிய சூழ்நிலையை தோற்றுவிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர மாநில தேர்தல் ஆணையர்கள் ஆகியோர்களின் நியமனம், சேவைக்கான நிபந்தனை மற்றும் பதவி காலம் சம்பந்தமான ஒரு புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு மத்திய கேபினட் அமைச்சர் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக பிரதமர் இருப்பார். இக்குழு பரிந்துரைக்கும் நபர்களை ஜனாதிபதி தலைமை தேர்தல் ஆணையராகவும், மாநில தேர்தல் ஆணையராகவும் நியமனம் செய்வார். இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.














