நேபாளம் - துணை அதிபராக ராம் சகாய பிரசாத் தேர்வு

March 18, 2023

நேபாள நாட்டின் புதிய துணை அதிபராக ராம் சகாய பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு தேர்தல் ஆணையம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, அவர் ஜனதா சமாஜ்பாடி கட்சியை சேர்ந்தவராவார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அஷ்டலட்சுமி மற்றும் ஜனமத் கட்சியை சேர்ந்த மமதா ஜா ஆகியோரை வீழ்த்தி, துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதிவான 52628 வாக்குகளில், ராம் சகாய் 30328 வாக்குகளைப் பெற்றுள்ளார். அஷ்டலட்சுமி 16328 வாக்குகளும், […]

நேபாள நாட்டின் புதிய துணை அதிபராக ராம் சகாய பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு தேர்தல் ஆணையம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, அவர் ஜனதா சமாஜ்பாடி கட்சியை சேர்ந்தவராவார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அஷ்டலட்சுமி மற்றும் ஜனமத் கட்சியை சேர்ந்த மமதா ஜா ஆகியோரை வீழ்த்தி, துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் பதிவான 52628 வாக்குகளில், ராம் சகாய் 30328 வாக்குகளைப் பெற்றுள்ளார். அஷ்டலட்சுமி 16328 வாக்குகளும், மமதா ஜா 2537 வாக்குகளும் பெற்றுள்ளனர். இறுதியில், ராம் சகாய் அடுத்த 5 ஆண்டுகளுக்கு துணை அதிபராக பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu