ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் - ஐரோப்பிய விண்வெளி மையம் பகிர்வு

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் பகிர்ந்துள்ளது. விண்வெளியில் உள்ள கோப்பர்னிக்கஸ் சென்டினல் 2 என்ற செயற்கைக்கோள் இந்த புகைப்படத்தை எடுத்து அனுப்பி உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே, கடலுக்கடியில் 48 கிலோமீட்டர் நீளத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமர் பாலத்தை பற்றி பல்வேறு கோட்பாடுகள் சொல்லப்படுகின்றன. இந்த நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையம் ராமர் பாலத்தின் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளதாவது: […]

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் பகிர்ந்துள்ளது. விண்வெளியில் உள்ள கோப்பர்னிக்கஸ் சென்டினல் 2 என்ற செயற்கைக்கோள் இந்த புகைப்படத்தை எடுத்து அனுப்பி உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே, கடலுக்கடியில் 48 கிலோமீட்டர் நீளத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமர் பாலத்தை பற்றி பல்வேறு கோட்பாடுகள் சொல்லப்படுகின்றன. இந்த நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையம் ராமர் பாலத்தின் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளதாவது: “ராமர் பாலத்தின் உள்ள மண் போன்ற அமைப்புகள் உலர்ந்த நிலையில் காணப்படுகின்றன. கடல் ஆழமற்று இருக்கிறது. மன்னார் வளைகுடாவை இலங்கையுடன் இணைக்கும் மேம்பாலம், ராமேஸ்வரத்தை இந்தியாவுடன் இணைக்கும் பாம்பன் பாலம் ஆகியவை விண்வெளியில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.”

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu