அயோத்தியில் ராமர் கோவில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரம்

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அந்தவகையில் சகாதத்கஞ்சில் இருந்து நயா காட் செல்லும் 13 கி.மீ. நீள ராம பாதைப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. ராமஜென்ம பூமி மற்றும் அனுமன்ஹார்கி கோவில் செல்லும் […]

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அந்தவகையில் சகாதத்கஞ்சில் இருந்து நயா காட் செல்லும் 13 கி.மீ. நீள ராம பாதைப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

ராமஜென்ம பூமி மற்றும் அனுமன்ஹார்கி கோவில் செல்லும் பக்தர்கள் எளிதில் சென்று வருவதற்கு சாலை வசதிகள் முக்கியமானது என்பதால் அந்த பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. அயோத்தி நகர விரிவாக்க பணிகளுக்காக அப்புறப்படுத்தப்படும் வியாபாரிகளுக்கு புதிய வணிக வளாகங்களில் கடைகள் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu