ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

September 4, 2023

ராமேஸ்வரத்தில் காற்று மற்றும் கனமழையின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகமாறுபட்டு காரணமாக காற்று,இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. நான்கு நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் போன்ற கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. அங்கு அடுத்த […]

ராமேஸ்வரத்தில் காற்று மற்றும் கனமழையின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகமாறுபட்டு காரணமாக காற்று,இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. நான்கு நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் போன்ற கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. அங்கு அடுத்த சில நாட்களுக்கு மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என தெரிவித்துள்ளனர். மீனவர்களின் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல  மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. ராமேஸ்வரத்தில் சில தினங்களுக்கு முன் மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தினமும் ஐந்து கோடி வரை  வர்த்தகம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu