ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டம்

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பகவந்த் குமார் தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவிலேயே அதிக அளவில் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை விசையாழியை வள்ளியூர் அருகே அமைத்துள்ளது. இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காற்றாலை விசையாழியை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் பகவந்த் குமார் நேரில் […]

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பகவந்த் குமார் தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவிலேயே அதிக அளவில் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை விசையாழியை வள்ளியூர் அருகே அமைத்துள்ளது. இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காற்றாலை விசையாழியை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் பகவந்த் குமார் நேரில் பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்காலத்தில் 7 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட விசையாழியை தயாரிக்க உள்ளதாக கூறினார். ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் காற்று வளம் சுமார் 30 ஜிகாவாட் உள்ளதால் அங்கு காற்றாலை நிறுவ உள்ளதாகவும், இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சாரம் விடுவிக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய போதுமான வாய்ப்பும் வளமும் இருப்பதாக கூறினார். சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும், பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும் என இணை அமைச்சர் பகவந்த் குமார் உறுதியளித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu